தங்கத்தின் விலையானது நேற்று (28) கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2015.09 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
இது கடந்த ஆறு மாதங்களில் 60 டொலர்கள் அதிகரிப்பாகும்.
அதேநேரம் ஒரு வருடத்தில் 261 டொலர்கள் அல்லது 15 சதவீத அதிகரிப்பாகும்.
தங்கத்தின் விலையானது கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக உலக சந்தையில் 2000 டொலர்களை கடந்த நிலையிலேயே உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு, டொலரின் பலமான நிலை ஆகிய காரணங்கள் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணம் என்றும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறெனினும், இன்று (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,015.45 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.