Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 10 பேர் மீட்பு

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 10 பேர் மீட்பு

இந்தியாவின் உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பணியாளர்கள் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமோடு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி கட்டுமானத்தில் இருந்த சில்க்யாரா வளைவு – பர்கோட் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது அதன் உள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கினர்.

ஆனால் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த அவசரகால நடவடிக்கைள் பொது பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் அந்த 41 பணியாளர்களும் பத்திரமாக தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர்.

நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல்இ செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவு அடைந்துள்ளது.

தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், அம்பியூலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles