வரி செலுத்த தவறியதன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2 பிரதான மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, டபிள்யூ எம் மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட் மற்றும் ரந்தேனிகல டிஸ்டில்லரீஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வரி செலுத்த தவறியதன் காரணமாக 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.