24 மணித்தியாலத்துக்கும் குறைந்த காலப்பகுதியில், துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு – கொச்சிக்கடையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்து முதியவரொருவர் சாதனை படைத்தார்.
ரிச்சட் பெர்னாண்டோ என்ற 67 வயதுடைய முதியவர் ஒருவரே குறித்த சாதனை பயணத்தை முன்னெடுத்தார்.
நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் அவர் தமது பயணத்தை ஆரம்பித்து நேற்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைந்தார்.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அவர் தமது பயணத்தை நிறைவு செய்தார்.