Friday, July 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்

100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்

மூடப்பட்ட வைத்தியசாலைகள், மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுடன் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கை முழுவதும் தற்போது 40 அரச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 100 அரச வைத்தியசாலைகள் மூடப்படுவதை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளை சூழவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் GMOA உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles