Monday, May 5, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் கூரிய வாளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர் கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொராயலேவத்த, ஹென்டியகல, சந்தலங்காவில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் வாள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 35 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் பன்னல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles