பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளுக்கான மின்சார விநியோகத்திற்காக கடந்த வருட இறுதிக்குள் அறவிடப்பட வேண்டிய 16 மில்லியன் ரூபா செலுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளத.
74 மின் இணைப்புகள் இவ்வாறு பணம் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அவற்றில் 29 இணைப்புகள் தொடர்பான 5 மில்லியன் ரூபா ஆறு வருடங்களாக அறவிடப்படவில்லை எனவும் மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 03 மில்லியன் ரூபா ஒரு வருடத்திற்கும் மேலாக அறவிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.