கொழும்பு நகரின் வீதியோரங்களில் ஆபத்தான மரங்களை நீக்கும் நடவடிக்கைக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொறுப்பேற்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், கொழும்பில் வீதியோரங்களில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்க முகவர் நிறுவனம் இல்லை என தெரிவித்தார்.
அத்துடன், கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான தரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வீதியின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்படுவதைத் தடுப்பதன் மூலம் அடுத்த வருடம் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.