Sunday, May 4, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞர்களுக்கு இலவச ஆணுறை

இளைஞர்களுக்கு இலவச ஆணுறை

இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக பாலுறவு நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் திலானி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட 607 எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்களில் 73 பேர் இளைஞர்கள் எனவும், அதில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் உள்ளடங்குதவாவும் அவர் கூறினார்.

பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் ஆணுறை பயன்படுத்த வேண்டியது அவசியமானது எனவும், ஏற்கனவே நாடளாவிய ரீதியில் உள்ள 41 கிளினிக்குகளில் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles