அனைத்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (27) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச, மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் உட்பட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு மதிய உணவு நேரத்தின் போது அரச நிறுவனங்களுக்கு முன்பாக எதிர்ப்பு இயக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.