சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணை எதிர்வரும் டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கை EFF திட்டத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் 8 ஆவது நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.