நேற்று (23) நிலவரப்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 96% நிரம்பியுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இன்று (24) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஊடகப் பேச்சாளர், மொத்த மின் உற்பத்தியில் 65% நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
நீர் மின் உற்பத்தித் திறன் அதிகரிப்புடன் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.