முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக கலவரமாக நடந்து கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு 7 விஜேராம மாவத்தை வீட்டுக்கு முன்னால் சென்ற குறித்த இராணுவ சிப்பாய், ஒரு வாரத்திற்குள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத படி கொன்றுவிடுவேன் என்று கூறி கலவரமாக நடந்துகொண்டதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் உடனடியாகச் செயற்பட்டு சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் ஹொரபவிட்ட – பமுனுகம கிரிவெல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் சிகிச்சைக்காக தனது சகோதரியின் கிருலப்பன வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.