கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் கொள்கை மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, துணைநில் வைப்பு வசதி விகிதம் (SDFR), துணைநில் கடன்வழங்கல் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை 100 அடிப்படை புள்ளிகளால்முறையே 9%, 10% ஆக குறைக்க முடிவு செய்தது.
உள்நாட்டு, உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களை கவனமாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்து மத்திய வங்கியின் நாணய சபை இந்த முடிவை எடுத்தது.