Tuesday, May 14, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் அரசாங்கம் கவனம்

புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் அரசாங்கம் கவனம்

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

அதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் அவர்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார். 

விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவ திட்டமிட்டிருப்பதாகவும், தற்போதுள்ள விவசாய ஆய்வு நிறுவனம் மறுசீரமைத்து, நவீனமயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்ற 25 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை...

Keep exploring...

Related Articles