அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
32 வயதான தனுஷ்க குணதிலக்க, செப்டம்பர் மாதம் குறித்த வழக்கிலிருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.
அதனையடுத்து, சுமார் 10 மாதங்களின் பின்னர் அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார்.
இந்நிலையில் செலவு தொடர்பான வழக்கு இன்று (24) நீதிபதி சாரா ஹாகேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட வழக்கில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாக நீதிபதி கூறினார்.
இதன்படி, குணதிலக்கவின் வழக்கு கட்டணத்தை அவரே பெற்றுக்கொள்ளும் வகையில் சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.