Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு

சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு

சமனலவெவ நீர்த்தேக்கத்தின் 10 வருடங்களுக்கு பின்னர் உயரிய அளவில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வரலாற்றில் இரண்டாவது தடவையாக இன்றைய தினம் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்று சமனலவெவ நீர்த்தேக்கத்தின் பொறியாளர் தெரிவித்தார்.

இதனால் சமனலவெவ நீர்த்தேக்கத்தை அன்மித்த பகுதி மற்றும் வளவ கங்கை அதனை அன்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு சமனலவெவ நீர்த்தேக்கத்தின் பொறியாளர் தெரிவித்தார்.

அத்தோடு நேற்றைய தினம் விவசாய பயிர் செய்கைக்கு திறந்து விடப்படும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏனைய வான் கதவுகள் இன்று திறக்கப்படும் என்று சமனலவெவ நீர்த்தேக்கத்தின் பொறியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles