சமனலவெவ நீர்த்தேக்கத்தின் 10 வருடங்களுக்கு பின்னர் உயரிய அளவில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வரலாற்றில் இரண்டாவது தடவையாக இன்றைய தினம் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்று சமனலவெவ நீர்த்தேக்கத்தின் பொறியாளர் தெரிவித்தார்.
இதனால் சமனலவெவ நீர்த்தேக்கத்தை அன்மித்த பகுதி மற்றும் வளவ கங்கை அதனை அன்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு சமனலவெவ நீர்த்தேக்கத்தின் பொறியாளர் தெரிவித்தார்.
அத்தோடு நேற்றைய தினம் விவசாய பயிர் செய்கைக்கு திறந்து விடப்படும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஏனைய வான் கதவுகள் இன்று திறக்கப்படும் என்று சமனலவெவ நீர்த்தேக்கத்தின் பொறியாளர் தெரிவித்தார்.