Friday, January 17, 2025
25.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுழந்தைகள் வெளிநாட்டவருக்கு விற்பனை: சிஐடி விசாரணை

குழந்தைகள் வெளிநாட்டவருக்கு விற்பனை: சிஐடி விசாரணை

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (23) கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் தெரிவித்துள்ளது.

இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக சிஐடியினர் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளது.

இந்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தியது.

இந் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணையினை சிஐடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles