Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரிக்கெட் வழக்கு ஒத்திவைப்பு

கிரிக்கெட் வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) வரை ஒத்திவைக்கப்பட்டது.

சோபித ராஜகருணா மற்றும் டி.என்.சமரக்கோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று கூடியது.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இன்று (24) மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

அதனையடுத்து மேலதிக விடயங்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles