க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் இன்று (24) வெளியிடப்பட்டுள்ளன.
மீள் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/ www.results.exams.gov.lk ஊடாக பார்வையிட முடியும்.
பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்திற்கு மொத்தம் 60,336 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
விண்ணப்பங்கள் செப்டம்பர் 07 முதல் 16 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த தகவலை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.