பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வைத்தியர் தனது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 29 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புளியங்குளம பிரதேசத்தில் நடத்தப்படும் மருத்துவ நிலையத்தில் வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற போது தாம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த பெண்பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.