மாணவர்களுக்கு பலவந்தமாக லஞ்ச் ஷீட்டை உட்கொள்ள வைத்ததாக கூறப்படும் நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, குறித்த பாடசாலையின் அதிபர் கம்பளை கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள மாணவர்கள் குழுவொன்று பாடசாலை அதிபரின் உத்தரவினால் பொலித்தீன், பத்திரிகை தாள்களை உட்கொண்டனர்.
இதனால் பாதிப்படைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.