Thursday, January 15, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையகப் பாதையில் செல்லும் ரயில்கள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

மலையகப் பாதையில் செல்லும் ரயில்கள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக ரயில் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் நேற்றைய தினம் (22) நான்கு தடவைகள் ரயில் பாதைகள் தடைபட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் அதிக மழை காரணமாக நேற்றிரவு (22) இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதன்படி இன்று (23) காலை 5 மணியளவில் 31ஆம் இலக்க சுரங்கப்பாதைக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஒஹிய மற்றும் இடல்கசின்ன நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதைகள் தடைப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles