சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளது.
சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நேற்று முன்தினம் (21) முதல் நீக்கியுள்ளதுடன், இதன்படி தற்போது சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 320 ரூபா தொடக்கம் 350 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக பொதியிடப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோ 275 ரூபாவுக்கும், சிவப்பு சீனி 330 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.