இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதன்படி, வெலிகபொல, இம்புல்பே, பலாங்கொடை, ஓப்பநாயக்க மற்றும் கொலன்ன ஆகிய பகுதிகளுக்கே சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.