நாட்டில் அரச சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றுவதற்கான வழிகாட்டல்களை முன்வைப்பதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த உப குழு, திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்தின் துறை மேற்பார்வைக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி உதயன கிரிந்திகொட தலைமையில் 14 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த உப குழுவில் அரச சேவையின் திறமையின்மை, முறையான பொறுப்பின்மை, ஊழல், மோசடி, முறையான மதிப்பீட்டு நடவடிக்கையின்மை, முறையான ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.