Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்

போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்

ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது.

இதனால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உதவி வழங்க உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கட்டார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயற்பட்டு வந்தது.

கட்டார் இருதரப்பிலும் பணயக்கைதிகள்- இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதனால் ஹமாஸ் அமைப்பினர் தங்களின் பிடியில் உள்ள 240 பணயக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இஸ்ரேல் மந்திரிசபை நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், ஒவ்வொரு 10 பணணயக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles