Friday, March 14, 2025
26.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரான்ஸ் தூதரகத்துக்கு 50 முறை அழைத்தவருக்கு மனநல மருத்துவரிடம் அறிக்கை பெறுமாறு உத்தரவு

பிரான்ஸ் தூதரகத்துக்கு 50 முறை அழைத்தவருக்கு மனநல மருத்துவரிடம் அறிக்கை பெறுமாறு உத்தரவு

பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.

குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்தசந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.

பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபரின் மனநிலை குறித்து மனநல மருத்துவரிடம் அறிக்கை பெறுமாறும் சிறைச்சாலைக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles