Wednesday, September 24, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று (22) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

சுகயீன விடுமுறையை அறிவித்துள்ள குறித்த ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் மற்றும் பணம் வசூலிக்கும் சேவையில் இருந்து விலகியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நெடுஞ்சாலை செயற்பாட்டு அலுவலகம் என்பன இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தி உரிய சேவைகளைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பணிபுரியும் சுமார் 11,000 உத்தியோகத்தர்கள் இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles