சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள ஐசிசியின் நிர்வாக கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைநிறுத்தம், ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் மற்றும் ஐசிசி யின் முழு அங்கத்துவ நாடுகளை இலக்காக கொண்ட போட்டிகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளன.
மேலும், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்தும் இங்கு விவாதிக்கப்படும்.