Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்திலிருந்து விழுந்து பெண் பலி: ஒருவர் காயம்

பேருந்திலிருந்து விழுந்து பெண் பலி: ஒருவர் காயம்

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த இபோச பேருந்தின் பின் மிதிபலகையில் இருந்து கணவனும் மனைவியும் விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (20) சீதுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 56 வயதுடைய அம்பலன்முல், சீதுவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த கணவன் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles