கையடக்கத் தொலைபேசிகள் அல்லது இலத்திரனியல் உபகரணங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் நடப்பதை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுதவற்கு அனுமதியில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதன்படி இனிமேல் அவ்வாறான முறையில் யாராவது செயற்பட்டால் அது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
இதேவேளைஇ எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிஷாந்த உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரினார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.