உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடையே பிரபலமான ‘vlog’ படைப்பாளரான Nas Daily, இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.
அதன்படி இன்று (20) அவர் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் பெரும் உதவியாக இருக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


