மீரிகமவில் இருந்து தலவாக்கலை – அக்கரபத்தனை நோக்கி பயணித்த லொறி ஒன்று சுரங்கப்பாதையில் மோதியதில் இன்று (20) அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதையில் இந்த லொறி மோதி விபத்துக்குள்ளானதாக திம்புளை, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விபத்துக்குப் பிறகு அந்த சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்வதில் சிறிது இடையூறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் அடை மழையினால் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும், அவ்வீதிகளில் வாகனங்களை செலுத்தும்போது அவதானமாக இருக்குமாறு சாரதிகளுக்கு ஹட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.