Monday, May 12, 2025
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று (19) தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் படி, நாட்டில் சுமார் 19,000 மெட்ரிக் டன் சீனி கையிருப்பில் உள்ளது.

அத்துடன், இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் கையிருப்பிலுள்ள குறிப்பிட்ட பொருட்களின் பெறுமதி அதிகரிக்கும்.

ஆனால் அரசாங்கம் என்ற வகையில், இது போன்ற தேவையற்ற இலாபத்தைத் தடுக்க அதிகபட்ச சில்லறை விலையை விதிக்கலாம்.

தற்போதைய அரசாங்கம் சீனி வரியை இரண்டு தடவைகள் மாற்றிய போது அவ்வாறான விலை உயர்வைத் தவிர்க்க இந்த நடவடிக்கையை பின்பற்றியதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சீனி இருப்பு குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டாலும், சீனி வர்த்தகர்கள் இலாபம் ஈட்ட பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles