தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால், அவர்களின் சலுகைகளை மீறி, குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஹேஷா விதானகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடமையாற்றும் செயலாளர் ஒருவருக்கு கோப் குழுவின் தலைவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.