உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதின.
போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, இந்திய அணியை முதலில் துடுப்பாட பணித்தது.
அதன்படி போட்டியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா வேகமாக துடுப்பாடி ஓட்டங்களை குவித்த போதும், அவர் 31 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து அணியின் ஓட்ட வேகம் படிப்படியாக குறைந்துச் சென்றது.
அணிக்கு நம்பிக்கை சேர்த்த விராட் கோலி 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்படி இந்திய அணி 50 ஓவர்களில் 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.
241 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட ஆரம்பித்த அவுஸ்திரேலியா, ஆரம்பம் முதலே வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதும், ட்ரெவிஸ் ஹெட் 137 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மார்னஸ் லபுஷேன் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் வென்று 2023ம் ஆண்டுக்கான உலக்கிண்ண கிரிக்கட் தொடரை வென்றதுடன், ஆறாவது முறையாக அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.