உள்ளூராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் அடுத்த வருடம் முதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இந்த விடயத்தினை ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
இதன்படி, அடுத்த வருடம் 8,400 ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர சேவைக்கு அமர்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.