தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை வாத்துவ – பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்து அருகில் இருந்த மின்கம்பம் மற்றும் தொலைபேசி கம்பம் உடைந்து அருகில் இருந்த இரண்டு வீடுகளின் மதில் மற்றும் வாயில் முற்றாக சேதமடைந்து நின்றதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தின் போது நடைபாதையில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றதாகவும், அப்போது பேருந்தில் சில பயணிகளே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதீத வேகம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.