மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் 154ம் கட்டை பகுதியில், இன்று காலை ரயில் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மண்மேடு அகற்றப்பட்டதன் பின்னர், இன்று முற்பகல் 10.15 அளவில் மலையக ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.