Wednesday, June 24, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுட்டு புரைக்கேறியதால் இளைஞன் மரணம்

புட்டு புரைக்கேறியதால் இளைஞன் மரணம்

புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது, அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது, வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர்.

சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து, இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில், சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து, சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles