2500க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,519 தாதியர்களுக்கு இன்று (நவம்பர் 17) நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
புதிய நியமனங்கள் மூலம் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள தாதியர்களின் எண்ணிக்கை 45,000 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் நோயாளர் பராமரிப்பு சேவையினை வலுப்படுத்தும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.