கோப் குழுவின் பெண் அதிகாரி ஒருவர் அதன் முன்னாள் தலைவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் சபாநாயகர்களின் நடத்தை தொடர்பில் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோப் குழுவின் முன்னாள் தலைவர் அங்குள்ள பெண் அதிகாரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து அந்த அதிகாரி மகளிர் மன்ற தலைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இவ்வளவு தாழ்வு நிலையை அடைந்திருக்கும் போது, ஏன் முடிவு எடுக்கக் கூடாது? 132 நிலையியற் கட்டளைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.