Monday, May 12, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 வருடங்களாக மகளை வன்புணர்ந்த தந்தையை தேடி வலைவீச்சு

2 வருடங்களாக மகளை வன்புணர்ந்த தந்தையை தேடி வலைவீச்சு

இரண்டு வருடங்களாக தனது 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

தபோவ – மயிலங்குளத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு தேடப்பட்டு வருகிறார்.

சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலும், கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.

தனது கணவர் தனது மகளை சுமார் 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் கடைசியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் சிறுமியின் தாய் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 09 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தாயின் பாதுகாப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles