வெல்லம்பிட்டி பகுதியில் பாடசாலையொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுமி மரணித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிராந்திய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த உத்தரவுக்கு அமைவாக, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 5 மாணவர்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.