Saturday, April 25, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனிப்பட்ட தகராறு: வாகனங்களை மோதிக்கொண்ட தந்தையும் மகனும்

தனிப்பட்ட தகராறு: வாகனங்களை மோதிக்கொண்ட தந்தையும் மகனும்

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு மகனும் தந்தையும் தங்கள் கார்களை மோதிக்கொண்ட சம்பவம் பேருவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் காலி-கொழும்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சிறிய ரக வேன் ஒன்றும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தை பேருவளையில் வர்த்தகர் எனவும், அவர் இன்று பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி கப்பலொன்றை விசாரணை செய்ய சென்றுள்ளார்.

அப்போது பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து காரில் சென்ற மகன் எதிரில் வந்த கார் தனது தந்தையின் கார் என அடையாளம் கண்டுகொண்டதாகவும், அதற்கமைய, அவர் ஓட்டி வந்த சிறிய வேனை கொண்டு கார் மீது மோதி அதனை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த வேனும் சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய கார் மற்றும் வேன் தற்போது பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுட்ன, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles