Friday, March 14, 2025
26.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மரணம்

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மரணம்

புத்தளம் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன், டெங்கு நோய் காரணமாக குழந்தை ஒன்று இன்று (16) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரசபை செயலாளர் பிரீத்திகாவின் ஆலோசனைக்கமைய நகரசபை டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை அழிப்பதுடன் உங்களது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்து உயிராபத்துக்களைத் தவிர்க்குமாறு நகரசபை நிர்வாகம் பொதுமக்களை வேண்டிக்கொள்கிறது.

மேலும் டெங்கு பரவும் அபாயகரமான சூழலை வைத்திருப்போருக்கு எதிராக நகரசபையினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles