Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்

காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று கைப்பற்றியது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஏவுகணை குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினர்.

அதன்பின் தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலியர்கள் 1இ200 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர்.

இதனால் இஸ்ரேல் இராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டது.

டந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் காசாவின் வட பகுதியில் சுமார் 15 இலட்சம் பேர் இடம் பெயர்ந்து காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles