இவ்வருடம் ஜுலை முதல் செப்டெம்பர் வரையான மூன்று மாதங்களில் 15 எயிட்ஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்த மூன்று மாதங்களில் 139 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 152 எச்.ஐ.வி நோயாளர்களும், இரண்டாவது காலாண்டில் 130 நோயாளர்களும், மூன்றாம் காலாண்டில் 145 நோயாளர்களும் கண்டறியப்பட்டதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் மேலும் தெரிவித்துள்ளது. .